பஞ்சாப் – ஜம்மு சாலையில் கேமராக்களை பொருத்தி பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது

0
22

பஞ்​சாப் – ஜம்மு தேசிய நெடுஞ்​சாலை​யில் சிசிடிவி கேம​ராக்​களை பொருத்தி பாகிஸ்​தானுக்​காக உளவு பார்த்த இளைஞர் கைது செய்​யப்​பட்​டார்.

நாட்​டின் மிக நீள​மான தேசிய நெடுஞ்​சாலை​யான என்​எச்44 காஷ்மீரின் நகரில் இருந்து கன்​னி​யாகுமரி வரை நீண்​டுள்​ளது. இந்த தேசிய நெடுஞ்​சாலை​யில் பஞ்​சாப் முதல் காஷ்மீர் வரையி​லான சாலை​யில் ராணுவ வாக​னங்​களின் போக்​கு​வரத்து மிக​வும் அதி​க​மாக இருக்​கும்.

பாகிஸ்​தானின் ஐஎஸ்​எஸ் உளவாளி​கள், பஞ்​சாப் எல்​லைக்கு உட்​பட்ட என்​எச் 44 நெடுஞ்​சாலை​யில் அதிநவீன சிசிடிவி கேம​ராக்​களை பொருத்தி பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு நேரலை​யாக காட்​சிகளை அனுப்பி வரு​வ​தாக இந்​திய உளவுத் துறை எச்​சரிக்கை விடுத்​தது.

இதுதொடர்​பாக பஞ்​சாப் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்தி இரு வாரங்​களுக்கு முன்பு மாநில எல்​லைக்கு உட்​பட்ட என்​எச் 44 நெடுஞ்​சாலை​யில் சில சிசிடிவி கேம​ராக்​களை கண்​டு​பிடித்​தனர்.

இவை சீனா​வில் தயாரிக்​கப்​பட்ட சிசிடிவி கேம​ராக்​கள் ஆகும். சூரிய ஒளி​யில் இயங்​கக்​கூடிய இந்த கேம​ராக்​கள், பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு நேரலை​யாக காட்​சிகளை அனுப்பி வந்​திருப்​பது தெரிய​வந்​தது.

இதுதொடர்​பான விசா​ரணையை பஞ்​சாப் போலீ​ஸார் மேலும் தீவிரப்​படுத்​தினர். இதன்​பேரில் பஞ்​சாபின் பதான்​கோட் அரு​கே​யுள்ள சாக் தார்​வால் கிராமத்தை சேர்ந்த பல்​ஜித் சிங் (30) என்​பவரை போலீ​ஸார் கைது செய்து உள்​ளனர்.

இதுகுறித்து பஞ்​சாபின் பதான்​கோட் போலீஸ் எஸ்​எஸ்பி தல்​வீந்​தர் சிங் தில்​லான் நேற்று கூறிய​தாவது: என்​எச் 44 தேசிய நெடுஞ்​சாலை​யின் பதான்​கோட் முதல் ஜம்மு வரையி​லான சாலை​யின் பல்​வேறு பகு​தி​களில் பல்​ஜித் சிங்​கும் அவரது கூட்​டாளி​களும் அதிநவீன சிசிடிவி கேம​ராக்​களை பொருத்தி உள்​ளனர்.

இந்த கேம​ராக்​கள் சீனா​வில் தயாரிக்​கப்​பட்​ட​வை. நாலாபுற​மும் சுழன்று உயர்தர வீடியோக்​களை எடுக்​கும் திறன் கொண்​ட​வை. சூரிய ஒளி​யில் இயங்​கக்​கூடிய​வை.

இந்த சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் பாகிஸ்​தான் ராணுவம் நேரடி​யாக என்​எச் 44 தேசிய நெடுஞ்​சாலையை உளவு பார்த்​துள்ளது. குறிப்​பாக இந்​திய ராணுவ வாக​னங்​கள், மத்​திய பாது​காப்பு படைகளின் வாக​னங்​களின் நடமாட்​டம் கண்​காணிக்​கப்​பட்டு உள்​ளது.

என்​எச் 44 தேசிய நெஞ்​சாலை​யின் பாலங்​கள், முக்​கிய சந்​திப்​பு​கள், சில கடைகளில் அமைக்​கப்​பட்​டிருந்த சிசிடிவி கேம​ராக்​கள் அகற்​றப்​பட்டு உள்​ளன. கைதான பல்​ஜித் சிங்​கிடம் விசா​ரணை நடத்தி வரு​கிறோம்.

துபாயை சேர்ந்த சிலரின் உத்​தர​வின்​பேரில் சிசிடிவி கேம​ராக்​களை பொருத்​தி​ய​தாக அவர் வாக்​குமூலம் அளித்து உள்​ளார். அவரது கூட்​டாளி​கள் விக்​ரம்​ஜித் சிங், பல்​வீந்​தர் சிங், தரன்​பிரீத் சிங் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது.

அவர்​களை தீவிர​மாக தேடி வரு​கிறோம். சுமார் 7 மாதங்​கள் வரை சிசிடிவி கேம​ராக்​கள் மூலம் உளவு பார்க்​கப்​பட்டு இருக்​கலாம் என்று தெரி​கிறது.

கைது செய்​யப்​பட்ட பல்​ஜித் சிங்​குக்கு போதை பொருட்​கள் கடத்​தல் கும்​பலுட​னும் தொடர்பு இருக்​கிறது. இதுதொடர்​பாக​வும் தீவிர வி​சா​ரணை நடத்தி வரு​கிறோம். இவ்​வாறு போலீஸ்​ எஸ்​எஸ்​பி தல்​வீந்​தர்​ சிங்​ தில்​லான்​ தெரிவித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here