மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தராததால் மக்களவை தலைவர் பதவிக்கு போட்டி உருவாகி உள்ளது.
முதன்முறையாக மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தல் 1952-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்றதாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இதில் தேர்வான கணேஷ் வாசுதேவ் மாவ்லேங்கர், நாட்டின் முதல் மக்களவை தலைவராகக் கருதப்படுகிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற வரலாற்றில், மக்களவை தலைவருக்கான தேர்தல் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. இன்று (ஜூன் 26) வாக்குப் பதிவுமுறையில் இந்தத் தேர்தல்...
ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே மேலும் சில தடுப்பணைகள் கட்டப்படும் என நேற்றுமுதல்வர் சந்திரபாபு தனது தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தனது குப்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குப்பம் வந்தடைந்தார் சந்திரபாபு நாயுடு. அங்கு அவர் பேசுகையில், “என்னை9-வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பியதற்கு ஒவ்வொருக்கும்...
மக்களவையில் மீண்டும் களமிறங்கிய போர் வீரர்கள்: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதிவு வைரல்
admin - 0
நாடாளுமன்றத்தில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் இரு நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர்.
இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நேற்று சமூக வலைதளத்தில் புகைப்பட பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த 2019-ம் ஆண்டில் எம்பிக்களாக பதவி வகித்த கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலேவின் புகைப்படத்தையும், தற்போதைய மக்களவையில் அவர்கள் மீண்டும் ஒன்றுகூடிய...
நீட், நெட் தேர்வு வினாத்தாள் கசிவு: நான்கு கட்டங்களாக விசாரிக்கும் சிபிஐ; பிஹார், குஜராத்துக்கு குழுக்களை அனுப்பியது
admin - 0
நீட் மற்றும் நெட் தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்த வழக்குகளை சிபிஐ நான்கு கட்டங்களாக விசாரிக்க உள்ளது. மேலும் ஆதாரங்களை திரட்டுவதற்கு பிஹாருக்கும் குஜராத்தின் கோத்ராவுக்கும் குழுக்களை அனுப்பியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் வழக்கத்துக்கு மாறாக 67 மாணவர்கள் முதலிடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிஹாரில் நீட் தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாளை கசியத் செய்ததாக மாணவர்கள் உள்ளிட்ட சிலரை போலீஸார்...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் நேற்று கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 15 நாட்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள் நாட்டில் 10 பிரச்சினைகள் நடந்துள்ளன.
1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் அவல நிலை, 4. நீட் மருத்துவத் தேர்வு ஊழல், 5. நீட் முதுகலை தேர்வு ரத்து,...
ரூ.1 லட்சம் பரிவர்த்தனைக்கு ரூ.1,000 கமிஷன் பெறுவதற்காக வங்கி கணக்கை வாடகைக்கு விடும் இளைஞர்கள் @ கோவா
admin - 0
வேலை இல்லாத பல இளை ஞர்கள் தங்களது வங்கிக் கணக் குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது கோவா போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக கிடைத்த தகவல்கள் குறித்து கோவா போலீஸார் பகிர்ந்து கொண்டதாவது: சிறு சிறு வேலைகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை குறிவைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி இணைய மோசடிக் கும்பல் அவர்களை ஏமாற்றி...
அரசியல் சாசனத்துடன் வந்த எதிர்க்கட்சியினர்: அயோத்தி எம்.பி.யை பெருமையுடன் அறிமுகப்படுத்திய அகிலேஷ்
admin - 0
தேர்தலுக்குப் பிறகு 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், அமைச்சர்களும் பதவியேற்கும்போது ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் அரசியல் சாசனத்தை உயர்த்திக் காட்டினர்.
இதுகுறித்து முன்னதாக செய்தியாளர்களிடம் கூறிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனம் மீது பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின்...
நீட் விவகாரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வேடிக்கை பார்க்கிறார் பிரதமர் மோடி: பிரியங்கா காந்தி கிண்டல்
admin - 0
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் என்னசெய்வதென்று தெரியாமல், நடக்கும் சம்பவங்களை பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இளநிலை நீட் தேர்வு, யுஜிசி-நெட் தேர்வு முறைகேடு தொடர்பாகசிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதுநிலை நீட் தேர்வுஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
பாஜக ஆட்சியில் ஒட்டு மொத்த கல்வி முறையும், ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கல்வியும், மாணவர்களின் எதிர்காலமும், பேராசை மற்றும் முகஸ்துதி...
நாடாளுமன்றத்தின் 18-வதுமக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜகதலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. கடந்த 9-ம் தேதி, நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையின் தற்காலிக தலைவராக பாஜக...
கட்சி அலுவலகத்துக்காக 42 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து 33 ஆண்டுகளுக்கு குத்தகை: ஜெகன் ஆட்சியின் முறைகேடுகள் அம்பலம்
admin - 0
ஜெகன் ஆட்சியின் போது, தனது சொந்த கட்சி அலுவலகத்துக்காக ஆந்திர மாநிலம் முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 42 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, ஒவ்வொன்றும் அரண்மனை போல்கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மாதம் ரூ.1,000 மட்டுமே வாடகைநிர்ணயிக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்கு குத்தகையும் போடப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகிஉள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், கடந்த ஜெகன் ஆட்சியில் செய்த பல முறைகேடுகள் தினமும் வெளியே வந்த...










