ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே மேலும் சில தடுப்பணைகள் கட்டப்படும் என நேற்றுமுதல்வர் சந்திரபாபு தனது தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தனது குப்பம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குப்பம் வந்தடைந்தார் சந்திரபாபு நாயுடு. அங்கு அவர் பேசுகையில், “என்னை9-வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பியதற்கு ஒவ்வொருக்கும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். இந்த 5 ஆண்டுகளில் உங்களின் பிரச்சனைஅனைத்தையும் தீர்த்து வைக்கிறேன்.
1994-2004 மற்றும் 2014-2019 வரை குப்பத்திற்கு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி உள்ளேன். வெளி வட்டார சாலை,இணைப்பு சாலைகள் அமைத்தேன். இந்த ஆண்டே கிருஷ்ணாநதிநீரை ஹந்திரி-நீவா கால்வாய்திட்டம் மூலம் குப்பம் வரை கொண்டு வருகிறேன். குப்பத்துக்குவிமான நிலையம் விரைவில் வரும்.பசு வளர்ப்பு திட்டத்தை கொண்டுவருகிறேன். தினமும் 10 லட்சம்லிட்டர் பால் இங்கு உற்பத்தி செய்யப்பட வேண்டும். குக்கிராமங்களுக்கும் இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பாலாற்றின் குறுக்கே தேவைப்படும் இடங்களில் மேலும் சில தடுப்பணைகள் கட்டப்படும். இதன் மூலம் குப்பம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் நிரந்தர தீர்வு காணப்படும்” என்றார்.