Google search engine
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்து பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா விமர்சனம் செய்துள்ளார். ராகுல் ஒருநாள் தீவிரவாதிகளை கூட சந்தித்து பேசலாம் என்று அவர் கூறியுள்ளார். தெற்கு பெங்களூரு பாஜகஎம்.பி.யான தேஜஸ்வி சூர்யா,இதுகுறித்து நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இடஒதுக்கீட்டை நீக்குவது தொடர்பாக அமெரிக்காவில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. அவர் சந்திக்கும் நபர்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது....
மகாராஷ்டிரா பால்கர் மாவட்ட பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியர் தர்ஷன். இவரது மகன் ஸ்மித் பந்தாரே (12) மற்றும் மகள் சன்ஸ்கிருதி (9) ஆகிய இருவரும்கடந்த ஆக.25-ம் தேதி வாரவிடுமுறை நாள் என்பதால் வீட்டில்மதியம் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. திடீரென பலத்த சத்தம் வீட்டருகில் கேட்டது. நடந்தது என்ன என்பதை பார்க்க அண்ணன், தங்கை இருவரும் இரண்டாவது மாடியில் உள்ள தங்களது வீட்டின்பால்கனிக்கு ஓடிச்...
நாட்றாம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில், காரில் இருந்த போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தீயில் கருகின. சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் அபி நரசிம்மன் (58). இவர், மேட்டூரில் இருந்து சென்னைக்கு நேற்று காரில் பயணித்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்தபையனப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்தபோது கார்திடீரென தீப்பற்றியது. உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில்...
1984-ல் நடந்த ஏர் இந்தியா விமானக் கடத்தலின்போது எனதுதந்தையும் விமானத்தில் சிக்கியிருந்தார் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். கடந்த 1999-ம் ஆண்டு டிசம்பர்24-ம் தேதி ‘ஐசி 814' என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்154 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து புறப்பட்ட 40 நிமிடங்களில் 5 தீவிரவாதிகளால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டது. பின்னர். மசூத் அசார், உமர்ஷேக் மற்றும் முஷ்டாக்அகமது சர்கார் ஆகிய மூன்று தீவிரவாதிகள் சிறையிலிருந்து...
டெல்லியில் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், தனக்கு...
ஹரியானாவில் அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மீதமுள்ள 1 தொகுதி சிபிஐ (எம்) கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றோடு முடிவடைய இருந்த நிலையில், காங்கிரஸ் தனது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டது. கடந்த சில...
உத்தர பிரதேசம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹில்டன் பப்ளிக் பள்ளியில் மதியம் சாப்பிட இறைச்சி பிரியாணி கொண்டுவந்த மாணவனை அந்த பள்ளி வெளியேற்றியுள்ளது. பள்ளியில் இறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதிய உணவு சாப்பிட 7 வயது மகனுக்கு இறைச்சி பிரியாணி கொடுத்திருக்கிறார் தாய். இதையடுத்து, அந்த மாணவன் பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. உடனடியாக பள்ளிக்கு வந்த மாணவனின் தாய்க்கும் பள்ளி முதல்வருக்கும் இடையில் வாக்குவாதம்...
உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியம் அரசமைப்புக்கு எதிரானது என்று கூறி அங்குள்ள மதரஸாக்களில் பயிலும் மாணவர்களை வழக்கமான பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்மாதம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில்,...
திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளது. 12-ம்தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முதல்நாளில் ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கஉள்ளார். அன்று இரவு முதல், வாகன சேவைகள் தொடங்குகின்றன. பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் உற்சவரான மலையப்பர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது தினமும் 2 வாகனங்களில்...
குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் விரிசல் என சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி மகராஜ் சிலை சமீபத்தில் உடைந்து விழுந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியால் குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் கெவாடியா நகரில் கடந்த 2018-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையில் (ஒற்றுமை சிலை) விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும்,...