கிள்ளியூர் தொகுதியில் தமாகா போட்டி

அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு (தமாகா) 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு தமாகா தலைவர் ஜிகே வாசன் இந்த தகவலை அறிவித்தார். ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்றும், இந்த முறை...

நாகர்கோவிலில் சிஐடியு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சிஐடியு முன்னாள் எம்.பி பெல்லார்மின் தலைமையில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் குமரி மாவட்ட மீன்பிடி மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக தமிழகத்திற்குக் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன....

குளச்சல்: குடியிருப்பில் இரவில் கம்புடன் முகமூடி ஆசாமி

குளச்சல் சைமன் காலனி பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் முகத்தை துணியால் மூடிய மர்ம நபர் ஒருவர் கையில் கம்புடன் வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி குதித்து செல்லும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சுமார் 5 வீடுகளில் இப்படி செய்ததாக கூறப்படுகிறது. தேவாலயத்திற்கு...

குமரி: ரூ 8 கோடியுடன் நள்ளிரவில் வந்த கண்டெய்னர் லாரி

குமரி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பார்வதிபுரம் மேம்பாலம் அருகே நள்ளிரவில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் பெட்டி பெட்டியாக 8 கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. ரிசர்வ்...

மண்டைக்காடு சென்ற தம்பதிக்கு நேர்ந்த விபத்து: மனைவி படுகாயம்

கேரளபுரத்தைச் சேர்ந்த அனீஸ் (29), அவரது மனைவி அர்ச்சனா (26) நேற்று (மார்ச் 23) பைக்கில் மண்டைக்காடு சென்றுவிட்டு திரும்பும்போது, நடுவூர் கரை சாலை பகுதியில் மூங்கில் கழை எதிர்பாராத விதமாக அர்ச்சனா மீது பட்டதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இது குறித்து மண்டைக்காடு...

கொல்லங்கோடு: கன்னியாஸ்திரி இல்லத்தில் திருடிய வாலிபர்

கொல்லங்கோடு அருகே அம்புலிகோணத்தில் உள்ள மலங்கரை கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இல்லத்தில், குரு மாணவன் போல் நடித்து வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த ₹2 லட்சத்தை திருடிச் சென்றார். தலைமை பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளே சென்ற அவர், தலைமை கன்னியாஸ்திரி உள்ளே சென்ற...

JUST IN குமரி: கலெக்டர் ஆபிஸில் பாஜகவினர் வாக்குவாதம்

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்டாலின் முகாம் பணிகளுக்காக தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இறக்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத நிலையில் எப்படி தையல் மிஷின்கள் கொண்டு வந்து இறக்கலாம் என்று அவர்கள் கேள்வி...

மண்டைக்காடு: கோயிலில் நள்ளிரவு வலிய படுக்கை பூஜை

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா மற்றும் 8ம் கொடை விழா நடந்து முடிந்தது. நேற்று மீனபரணி கொடை விழாவை முன்னிட்டு பொங்கல் விழா, நள்ளிரவு 12 மணிக்குள் முக்கிய வழிபாடான வலிய படுக்கை...

குமரி: கல்லூரி பேராசிரியரிடம் ரூ 25 லட்சம் மோசடி – வழக்கு

அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் பாஸ்கரன், களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த ஜெயசேகர் என்பவரிடம் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ. 25 லட்சத்து 9 ஆயிரத்து 963 முதலீடு செய்துள்ளார். பணத்தை திரும்பத் தர ஜெயசேகர் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில்,...

மார்த்தாண்டம்: நாயை கல்லால் அடித்து கால் உடைப்பு – வீடியோ

மார்த்தாண்டம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஷானு என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்டு நாயை ராஜின் மற்றும் பிபின் ஆகியோர் கல்லால் தாக்கி அதன் காலை ஒடித்து விட்டனர். காயமடைந்த நாய் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மார்த்தாண்டம் போலீசார் இது...