குமரி: பெண்ணுக்கு வெட்டு; நீதிமன்ற உத்தரவுபடி வழக்கு

களியக்காவிளை பகுதியை சேர்ந்த ரோஸ்மேபல் (52) என்பவருக்கும், அவரது கணவரின் தம்பி சுபனேஷ் (57) மற்றும் அவரது மனைவி லலிதா குமாரிக்கும் வீட்டிற்கு மின் இணைப்பு எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ரோஸ்மேபல் வீட்டிற்கு மின் இணைப்பு எடுக்கும்போது, சுபனேஷ் மற்றும் லலிதா குமாரி...

புதுக்கடை: பள்ளி மாணவி மாயம் போலீசார் விசாரணை

அம்சி பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி பெனிஸ்மா, உறவினர் திருமண நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை யாராவது கடத்திச் சென்றார்களா அல்லது வேறு ஏதேனும்...

குளச்சல்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகளை நேற்று 2வது நாளாக நேரில் சென்று ஆய்வு செய்தார். குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட மணலிக்கரை புனித ஜோசப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். வாக்காளர்களுக்கு...

பத்மநாபபுரம் தொகுதியை பா.ஜ.கவுக்கு தள்ளிவிட்ட இபிஎஸ்

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சர் சிவசங்கரின் குன்னம் தொகுதி ஐ.ஜே.கே.வுக்கும், சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம், முத்துசாமியின் ஈரோடு மேற்கு, காந்தியின் ராணிப்பேட்டை தொகுதிகள் த.மா.கா.வுக்கும், அமைச்சர்கள் சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை, டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி தொகுதிகள் அ.ம.மு.க.வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியகருப்பனின்...

குமரி: பறக்கும் படையினர் ரூ. 6 லட்சம் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை கிராத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி டெம்போவில் இருந்து ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீன் வாங்குவதற்காக இந்தப் பணம் கொண்டு வரப்பட்டதாக...

கிள்ளியூர்: மாற்றுத்திறனானிகள் தேர்தல் விழிப்புணர்வு

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு பகுதியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் 3 சக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. தேர்தலில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வாக்காளர்கள் 'என் வாக்கு விற்பனைக்கு அல்ல', 'ஜனநாயக கடமையாற்றுவோம்', 'அனைவரும் வாக்களிப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை...

குமரி: வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மொத்தம் 2,295 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,295 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 2,485 விவிபேட் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகின்றன. தேர்தல்...

குமரி: கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது

பளுகல் பகுதியை சேர்ந்த ஜித்து (32) மற்றும் அவரது நண்பர்கள் ராகுல், சபின் ஆகியோர் சேர்ந்து 24.12.2016 அன்று மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சபின் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜித்து மற்றும் ராகுல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

குழித்துறை: மறை மாவட்ட ஆயர் காலமானார் இன்று நல்லடக்கம்

குழித்துறை மறை மாவட்டத்தின் முதல் ஆயராக இருந்த ஜெரோம் தாஸ் வறுவேல் நேற்று (24ஆம் தேதி) சென்னையில் காலமானார். அவரது உடல் நேற்று மாலை குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று (25ஆம் தேதி) மாலை 3 மணிக்கு திருத்துவபுரத்தில் உள்ள மூவொரு இறைவன் பேராலயத்தில் இறுதிச் சடங்கு...

புதுக்கடை: சாமி ஊர்வல பக்தர்கள் சாலை மறியல்

புதுக்கடை அருகே அம்சி பகுதியில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவின் இறுதி நாளான நேற்று மாலை, சாமி விக்கிரகங்கள் கடலில் ஆறாட்டிற்காக ஊர்வலமாக சென்றன. போலீசார் மேளதாளமின்றி செல்ல வற்புறுத்தியதால், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி தலைமையில் பக்தர்கள் சாலையின் நடுவே அமர்ந்து...