குழித்துறை நகராட்சி ஆணையாளர் வெங்கடாஜலபதி கவுன்சிலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இரவு பகலாக நடைபெற்றது. நெல்லை மண்டல அதிகாரி ரவீந்திரன், நகராட்சி தலைவர் பொன் ஆசை தம்பியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை அடுத்து, நேற்று இரவு 7 மணிக்கு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.















