தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாக சாலையில் உள்ள அல்போன்சா நகர் புனித திருத்தல அல்போன்சா தேவாலய 10 நாள் பெருந்திருவிழா நேற்று ஜூலை 19-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது, இத்திருவிழா வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது,

குமரி – 23 புதிய பேருந்துகள் இயக்கம்

மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகளை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.தமிழக அரசால் இயக்கப்படுகின்ற சேதமடைந்த பழைய அரசு பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதே போல இன்று மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து, மதுரை, திருச்சி, களியக்காவிளை,...

கலைஞர் கனவு இல்லம் பணி ஆணை வழங்கல்

கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் (2024-2025) திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2 பயனாளிகளுக்கு ரூ. 3. 50 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான முதல் வேலை உத்தரவை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்ட ஜெகதீஷ் வழங்கினார், உடன் துணைத்...

குழித்துறையில் 99 ஆவது வாவுபலி பொருட்காட்சி தொடக்கம்

குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இவ்வாண்டு நடைபெறும் பொருட்காட்சி நேற்று முதல் வரும் 6ம் தேதி முடிய 20 நாள்கள் நடைபெறுகிறது துவக்க விழா நேற்று மாலை நடந்தது அமைச்சர் மனோ தங்கராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின் முதல் டிக்கெட்...

ஆரல்வாய்மொழியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 4 முக்கு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழை நேரத்தில் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதைதொ...

காமராஜருக்கு நாம் தமிழர் கட்சி மலரஞ்சலி

கன்னியாகுமரி மாவட்டம் கர்மவீரர் காமராசரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தக்கலை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு இன்று நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் மாவட்ட தலைவர் சத்தியதாஸ் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சீலன் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள். இதில்...

288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற குமரி ஆட்சியர் அழைப்பு.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஆரல்வாய்மொழி பேரூராட்சி குமாரபுரம் திட்டப்பகுதியில் உள்ள 288 குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள நலிவடைந்த பிரிவினர் நாகர்கோவில் வாழ்விட அலுவலகத்தை அணுகலாம். தகவலுக்கு...

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.   மன்னார் வளைகுடா மற்றும் அதனை...

குறண்டி கோரக்க நாதர் கோவிலில் பூஜையுடன் தொடங்கிய திருப்பணி.

குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இதில் உள்ள சிறு கோவில்களில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் சுசீந்திரம் தேரூர் அருகே உள்ள குறண்டி கோரக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த உபயதாரர்கள் மூலம்...

தண்ணீர் வராத ஆழ்துளை கிணறுக்கு மின்மோட்டார்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டாத்துறை ஊராட்சி வெட்டுகுழி பகுதியில் ஆள்துளை கிணறு அமைத்து தண்ணீர் வராத நிலையிலும் மின்மோட்டார், தண்ணீர் குழாய் அமைத்துமக்கள் பணத்தை ஊராட்சி நிர்வாகம் வீணடித்ததாக நாம் தமிழர் கட்சி முறைகேடு புகார் கொடுத்தது. இதை கண்டித்து பஞ்சாயத்து தலைவர்...