கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 4 முக்கு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால், மழை நேரத்தில் வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். அதைதொ டர்ந்து அங்கு மழைநீர் ஓடை அமைக்க நெடுஞ்சாலை துறைக்கு ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்று அங்கு மழைநீர் வடிகால் ஓடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெடுஞ் சாலைதுறை ஆய்வாளர் சதாசிவம், கவுன்சிலர் சுடலை யாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.