குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது இவ்வாண்டு நடைபெறும் பொருட்காட்சி நேற்று முதல் வரும் 6ம் தேதி முடிய 20 நாள்கள் நடைபெறுகிறது
துவக்க விழா நேற்று மாலை நடந்தது அமைச்சர் மனோ தங்கராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பின் முதல் டிக்கெட் விற்பனையை துவக்கி வைத்தார் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைதம்பி முன்னிலை வகித்தார் தொடர்ந்து பொருட்காட்சி மைதானத்தில் உள்ள விஎல்சி மண்டபத்தில் துவக்க விழா நடந்தது
அமைச்சர் மனோ தங்கராஜ் பக்க காட்சியை திறந்து வைத்து விழாவிற்கு தலைமை வகித்து பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மக்கள் வாவுபலி பொருட்காட்சியை ஒட்டி குழித்துறைக்கு வருகை தந்து தமது முன்னோர்களை நினைத்து பலி தர்ப்பணம் செய்கின்றனர் அதன்பிறகு செடி, கொடிகளை வாங்கி செல்கின்றனர்
இந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் செடி கொடிகள் வாங்குவதற்காகவே வாவுபலி எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருப்பார்கள்
பொருட்காட்சித் திடல் மைதானத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.