தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தவெக தயாராகி வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் திமுக, கூட்டணி காங்கிரஸ் 5, அதிமுக -1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அதிக இடங்களில் தவெக வெற்றி பெற்றாலும் குமரி மாவட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்கவில்லை.















