மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பேருந்துகளை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசால் இயக்கப்படுகின்ற சேதமடைந்த பழைய அரசு பேருந்துகளை மாற்றி, புதிய பேருந்துகள் இயக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதே போல இன்று மார்த்தாண்டம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து, மதுரை, திருச்சி, களியக்காவிளை, நாகர்கோயில் உட்பட 23- வழித்தடங்களுக்கு புதிய பேருந்துக்கள் இயக்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கி 23- புதிய அரசு பேருந்துகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகை கத்பர்ட் , பிரின்ஸ், குழித்துறை நகர மன்ற தலைவர் பொன். ஆசை தம்பி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.