‎கருங்கல் அருகே திருமணம் செய்வதாக கூறி திருமணமான பெண்ணிடம் உல்லாசம் : ஏட்டு மீது வழக்கு

0
31
கருங்கல் அருகே திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி மிரட்டியதாகப் பெண் அளித்த புகாரில், போலீஸ் ஏட்டு சாம்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கருங்கல் அருகே திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி மிரட்டியதாகப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸ் ஏட்டு சாம்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

கருங்கல் அருகே திருமணமான முதுகலை பட்டதாரி பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி ஏமாற்றி மிரட்டல் விடுத்த போலீஸ் ஏட்டை போலீசார் தேடி வருகின்றனர்.‎

‎கருங்கல் அருகே உள்ள பிலாவினை பகுதியை சேர்ந்த பட்டதாரியான 37 வயது மலர் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்ற பெண்ணுக்கு கணவரும், 2 மகள்களும் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.‎

‎கடந்த 2022 ஆம் ஆண்டு மலருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் மீது புகார் கொடுக்க மலர் கருங்கல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக இருந்த புதுக்கடை கையாளவிளை சாம்சன் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.‎

மலரிடம் இருந்து செல்போன் நம்பரை பெற்றுக் கொண்ட போலீஸ் ஏட்டு இந்த பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன் என அவருக்கு உதவியதாக தெரிகிறது. செல்போனில் பேசி நட்பாக வளர்ந்த இவர்களது உறவு பின்னர் காதலாக மலர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து சாம்சன் பைக்கில் மலரை பல்வேறு இடத்திற்கு அழைத்து சென்று வந்துள்ளார். மலர் வீட்டிற்கு அடிக்கடி சென்ற சாம்சன் அங்கு அவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.‎

இதனிடையே சாம்சன் கருங்கலில் இருந்து இரணியலுக்கு மாற்றல் ஆகி வந்தார். அப்போதும் அவர்களது காதல் தொடர்ந்து உள்ளது. இவர்களது பழக்கம் குறித்து தெரிந்து கொண்ட அவரது கணவர் மலரிடம் கோபித்துக் கொண்டு வெளிநாடு சென்று விட்டார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சாம்சன் மீண்டும் கருங்கல் காவல் நிலையத்திற்கு மாற்றல் ஆகி சென்று விட்டார். அங்கு சாம்சனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மலர் வற்புறுத்தி உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் மலரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.‎

இது குறித்து மலர் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தனக்கும் போலீஸ் ஏட்டு சாம்சனுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்கு திருமணம் ஆகவில்லை என கூறி திருமணம் செய்து கொள்கிறேன் என பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறி உள்ளார்.‎

‎இதனால் கடந்த 2023 ஆம் ஆண்டு தான் கர்ப்பம் ஆகி விட்டதாகவும், இது குறித்து சாம்சனிடம் கூறிய போது வெளிநாட்டில் இருந்த எனது கணவரை ஊருக்கு வரவழைக்க கூறினார். இதை அடுத்து அவர் ஊருக்கு வந்தார். பின்னர் எனக்கு கருங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. எனவே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி என்னை ஏமாற்றி தகாத வார்த்தைகள் கூறி மிரட்டல் விடுத்து வரும் போலீஸ் ஏட்டு சாம்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.‎

‎புகாரை பெற்றுக் கொண்ட குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறை சப். இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி ஐபிசி 294(பி), 417, 420 மற்றும் பிஎன்எஸ் 351(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் விசாரணை மேற்கொண்டு வருகிறார். போலீசார் தேடுவதை அறிந்த ஏட்டு சாம்சன் தலைமறை வாகிவிட்டார். போலீஸ் ஏட்டு திருமணமான முதுகலை பட்டதாரி பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பழகி பின்னர் ஏமாற்றி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here