சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 புதிய திட்டங்கள்: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்

0
25

சென்​னை​யில் போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்க 3 புதிய திட்​டங்​களை செயல்​படுத்த நெடுஞ்​சாலைத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது. இதற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்​டர் கோரி​யுள்​ளது.

சென்​னை​யில் போக்குவரத்து நெரிசல் என்​பது மிக முக்​கியப் பிரச்​சினை​யாக உரு​வெடுத்​துள்​ளது. இதற்கு தீர்வு காணும் வகை​யில் பல்​வேறு உட்​கட்​டமைப்பு திட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக, பேசின் பாலம் மற்​றும் கூவம் ஆற்​றுப் பாலத்தை விரிவுபடுத்​த​வும், வியாசர்​பாடி​யில் உள்ள மேம்​பாலக் கட்​டமைப்பை நீட்​டிக்​க​வும் விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்​பந்​தப்​புள்​ளி​கள் கோரப்​பட்​டுள்​ளன.

கிராண்ட் நார்​தர்ன் டிரங்க் சாலை​யில் உள்ள பேசின் பாலத்தை விரிவுபடுத்​து​வதற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்​சாலைத் துறை ரூ.19.10 லட்​சம் மதிப்​பில் ஒப்​பந்​தப்​புள்ளி கோரி​யுள்​ளது. இந்​தப் பாலம் பக்​கிங்​ஹாம் கால்​வாய், பேசின் பாலம் ரயில் நிலை​யம் மற்​றும் ஓட்​டேரி நல்லா கால்வாய் ஆகிய​வற்​றைக் கடந்து செல்​கிறது.

தற்​போது பாலத்​தின் சாலைப் பகுதி 6 மீட்​டர் அகலத்​தில் மட்​டுமே உள்​ள​தால், காலை மற்​றும் மாலை நேரங்​களில் கடுமை​யான போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது. குறிப்​பாக, ஒரு கிலோமீட்​டருக்​கும் அதி​க​மான தூரத்​துக்கு வாக​னங்​கள் அணிவகுத்து நிற்​கின்​றன.

இந்​தப் பாதை ஸ்டான்லி அரசு மருத்​து​வ​மனை, மருத்​து​வக் கல்வி நிறு​வனங்​கள், ரயில் நிலை​யங்​கள், சரக்கு ரயில் முனை​யங்​கள், வணிக நிறு​வனங்​கள் மற்​றும் சிறு தொழிற்​சாலைகளுக்​குச் செல்ல முக்​கிய வழித்​தட​மாக உள்​ளது.

இதனால், பாலத்தை விரிவுபடுத்​து​வதற்​கான தொழில்​நுட்ப சாத்​தி​யக்​கூறுகள், கட்​டு​மான வடிவ​மைப்​பு, போக்​கு​வரத்​துத் தேவை, நிலம் கையகப்​படுத்​துதல், சுற்​றுச்​சூழல் பாதிப்​பு​கள் மற்​றும் திட்​டச் செலவு உள்​ளிட்ட விவரங்​களை ஆய்வு செய்து விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்பட உள்​ளது.

வியாசர்​பாடி​யில் கிராண்ட் நார்​தர்ன் டிரங்க் சாலை​யில் அமைந்​துள்ள கிரேடு செப்​பரேட்​டரை நீட்​டிப்​ப​தற்​கான திட்ட அறிக்கை தயாரிக்​கப்பட உள்​ளது.

இதே​போல், சென்​னை​யில் கோயம்​பேடு–​திரு​மங்​கலம் இடையே போக்​கு​வரத்து நெரிசலைக் குறைக்​கும் வகை​யில், கூவம் ஆற்​றின் குறுக்கே உள்ள பாலத்தை அகலப்​படுத்​து​வதற்​கான விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்க நெடுஞ்​சாலைத் துறை ஒப்​பந்​தப்​புள்ளி கோரி​யுள்​ளது.

இந்த திட்ட அறிக்கை பணிக்​கான ஒப்​பந்த மதிப்பு ரூ.14.40 லட்​ச​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை​யின் முக்​கிய போக்​கு​வரத்​துப் பாதை​யான உள்​வட்​டச் சாலை​யில், ஜவஹர்​லால் நேரு சாலை​யில் கூவம் ஆற்​றின் குறுக்கே இந்​தப் பாலம் அமைந்​துள்​ளது.

கோயம்​பேடு–அண்ணா நகர் மேற்கு சந்​திப்பு அரு​கே, வி.ஆர்.மால் பகு​தி​யில் இருந்து சுமார் 300 மீட்​டர் தொலை​வில் இப்​பாலம் உள்​ளது. தற்​போது இந்​தப் பாலத்​தின் வாக​னப் போக்​கு​வரத்​துக்​கான அகலம் 18.8 மீட்​ட​ராக உள்​ளது.

இதனை 33.8 மீட்​ட​ராக அதி​கரிக்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​காகப் பாலத்​தின் இரு​புறங்​களி​லும் தலா 7.5 மீட்​டர் அகலப்​படுத்​த​வும், 131 மீட்​டர் நீள​முள்ள பாலத்​தின் 8 பகு​தி​களி​லும் பணி​களை மேற்​கொள்​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகளை ஆய்​வு செய்​ய​வும்​ திட்டமிடப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here