Google search engine
கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவின் ஞானேஸ்வரி யாதவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 1 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இதுவரை 5 பதக்கங்கள் வென்றுள்ளது. இந்த பதக்கங்கள் அனைத்தும் பளுதூக்குதல் (4), பாரா பவர்லிஃப்டிங்கில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது பதக்கப்பட்டியலில் இந்தியா 8-ம்...
சீ​னா​வின் ஹங்சோ நகரில் ஐஎஸ்​எஸ்​எஃப் உலகக் கோப்பை துப்​பாக்கி சுடு​தல் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிருக்​கான 25 மீட்​டர் பிஸ்​டல் பிரிவு இறு​திப் போட்டியில் இந்​தி​யா​வின் ஈஷா சிங் 40 புள்​ளி​களை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீராங்​க​னை​யான மனு பாகர் 28 புள்​ளி​களு​டன் 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றார்​.
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று நாட்​டுக்கு பெருமை சேர்த்​துள்​ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி. இந்​திய ரயில்வே ஊழிய​ரான ராஜா, தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி​யில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்​தார். சிறு வயதிலேயே பளுதூக்​கும் விளை​யாட்​டின் மீது கொண்ட ஆர்வத்​தால், முறை​யான பயிற்​சிகளை மேற்​கொண்டு ஜூனியர் பிரிவு​களில் பல்​வேறு சாதனை​களை படைத்​தார். 2017-ம் ஆண்டு காமன்​வெல்த்...
 ஆகஸ்ட் 4 முதல் தமிழ்​நாடு கிரிக்​கெட் சங்​கம் ​(டிஎன்சிஏ) நடத்​தும் ஸ்ரீராம் கேபிட்​டல் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி நடை​பெறவுள்​ளது. 10-வது ஆண்​டாக நடை​பெறும் இந்​தப் போட்​டி​யில் மொத்​தம் 8 அணி​கள் பங்​கேற்​கின்​றன. இந்த சீசனின் முதல்​கட்ட ஆட்​டங்​கள் திண்​டுக்​கலிலும், இறுதிக்கட்ட ஆட்​டங்​கள் சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தி​லும் நடை​பெறவுள்​ளன. திண்​டுக்​கல்​லில் நடை​பெறும் போட்டிகளுக்கான டிக்​கெட் விலை அனைத்து ஸ்டாண்டுகளுக்கும் தலா ரூ. 200 என்​றும், சென்​னை​ போட்டிகளுக்​கான டிக்​கெட் விலை சி,டி,இ,எஃப், ஐ,ஜே,கே...
ஓமனின் மஸ்​கட்​டில் நடை​பெற்று வரும் ஆசிய சாம்பியன்​ஷிப் இளை​யோர் ஹாக்கி-5ஸ் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி வெள்​ளிப் பதக்​கத்தை வென்​றது. மஸ்​கட் நகரில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் சீனா 4-2 என்ற கோல் கணக்​கில் இந்​திய அணியை வீழ்த்தி தங்​கம் வென்றது. சீன அணி தரப்​பில் டாங்​டாங் லு, கெக்​சின் டாங், ஜியாக்​சின் குவா, சென் கே ஆகியோர் தலா ஒரு கோலடித்​தனர். இந்​திய அணி தரப்​பில் நவுஷீன்...
ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான 3-வது மற்​றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி​​யில் இந்திய அணி 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி​யாக விளை​யாடி 81 ரன்​கள் குவித்​தார். இதையடுத்து ஜிம்​பாப்​வேவுக்கு எதிரான இந்​தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்​றியது. இந்​திய அணி, ஜிம்​பாப்​வே​யில் சுற்​றுப்​பயணம் செய்து 3 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடியது. 2 போட்​டிகள்...
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிர் 49 கிலோ பளுதூக்​குதல் பிரி​வில் இந்​திய வீராங்​கனை மீராபாய் சானு தங்​கம் வென்​றார். காமன்வெல்த் போட்​டி​யில் தொடர்ச்​சி​யாக 3-வது முறை​யாக தங்​கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்​துள்​ளார் மீரா​பாய் சானு. பிரிட்​டனின் கிளாஸ்கோ நகரில் காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. நேற்று நடை​பெற்ற மகளிர் 48 கிலோ எடைப்​பிரிவுப் போட்​டி​யில் மீரா​பாய் சானு, ஸ்னாட்ச் பிரி​வில் 85 கிலோ​வும், கிளீன் அன்ட்...
 கிளாஸ்கோ காமன்வெல்த் விளை​யாட்​டுப் போட்டியில் வெள்​ளிப் பதக்​கம் வென்​றதன் மூலம் சாதனை படைத்​துள்ள ரிஷிகண்டா சிங், கட்​டிடம் கட்​டுமிடத்​தில் தினக்​கூலி​யாக இருந்து சாம்​பிய​னாக மாறிய​வர் என்ற செய்தி அனைவரை​யும் கவர்ந்​துள்​ளது. மணிப்பூர் மாநிலம் இம்​பாலைச் சேர்ந்த 28 வயதான ரிஷிகண்டா சிங், ஏழ்​மை​யான குடும்​பத்​தில் பிறந்​தவர். தனது இளம்​வயதை பெரும்​பாலும் வேலை பார்த்தே கழித்​துள்​ளார். இம்​பாலின் பல்வேறு பகு​தி​களில் கட்​டிட வேலைகளில் அவர் தினக்​கூலி​யாக வேலை பார்த்​துள்​ளார். செங்​கல், சிமெண்ட்,...
உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் கனடா​வில் உள்ள ஆன்​டாரியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், மலேசி​யா​வின் டாய்ஸ் யே சான் லீயை எதிர்த்து விளையாடினார். இந்த மோதலில் அனஹத் சிங் 11-4, 11-8, 11-3 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்னேறி​னார்.
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறு​திப் போட்டி வரும் 2027-ம் ஆண்டு ஜூன் 9 முதல் 13 வரை லண்​டனில் உள்ள தி ஓவல் மைதானத்​தில் நடை​பெறும் என ஐசிசி அறிவித்துள்​ளது. அடுத்த மூன்று உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறுதி போட்​டிகளை நடத்​தும் உரிமையை இங்​கிலாந்து கடந்த ஆண்டு கைப்​பற்​றி​யிருந்​தது. இதில் ஒவ்​வொரு போட்​டிக்​கு​மான மைதானத்​தைத் தேர்ந்​தெடுக்​கும் பொறுப்​பு, இங்​கிலாந்து வாரி​யத்​திடமே உள்​ளது. இது​வரை நடை​பெற்ற 3 உலக டெஸ்ட்...