ஜூனியர்களுக்கான சிறுமிகள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் எமரி கோம்ப்ஸை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மாயா தமிழகத்தின் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். சிறுவர்கள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அர்னவ் விஜய் பாபர்கர் 4-6, 1-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஆண்ட் ரூஜான்சனிடம் தோல்வி அடைந்தார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி கடந்த ஜனவரியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரை 2-1 என வென்றிருந்தது. முன்னதாக 2024-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் இறுதியில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி 20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டி...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 8-வது நாளான நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 20-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
7-ம் நிலை வீரரான ரஷ்யாவின்...
துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த கிழக்கு மண்டலம் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 79 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது.
கேப்டன் இஷான் கிஷன் 111, குமார் குஷாக்ரா 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்....
துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கேப்டன் இஷான் கிஷன் சதத்தால் கிழக்கு மண்டல அணி முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. கிழக்கு மண்டலம், தென் மண்டல அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
டாஸில் வெற்றி பெற்ற கிழக்கு மண்டல அணியின் கேப்டன்...
3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி நமீபியாவின் வின்ட்ஹோயக் நகரில் நடைபெற்று வந்தது.
இறுதிச் சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் முன்னேறிய நிலையில் நேற்று இறுதி ஆட்டம் நடைபெற்றது.
முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு...
பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 விக்கெட்களை வீழ்த்தியது எப்படி? – சொல்கிறார் இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி
admin - 0
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக 3 விக்கெட்களைக் கைப்பற்றியது எப்படி என்பது தொடர்பான விவரங்களை இந்திய வீராங்கனை ஸ்ரீ சரணி பகிர்ந்துள்ளார்.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 55...
துலீப் கோப்பை இறுதிப் போட்டி கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகளுக்கு இடையே நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் கிழக்கு மண்டலம் இஷான் கிஷனின் அபார சதத்துடன் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது கிழக்கு மண்டலம் அணி.
ஆனால், விஷயம் அதுவல்ல சூப்பர் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி பேட் செய்யப்போகிறார் என்ற செய்தி எட்ட, ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர்....
மறக்க முடியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஆகப்பெரிய வெற்றி: 414-ஐ விரட்டி வெறும் 72 ரன்களா?
admin - 0
ஒருநாள் சர்வதேசப் போட்டியின் மிகப்பெரிய வெற்றி நிகழ்ந்த நாள்தான் இது. இந்திய அணியின் 2023 இலங்கைத் தொடரில் ஒருநாள் போட்டி ஒன்றில் பெற்ற மிகப்பெரிய சாதனை வெற்றியை இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஈட்டிய மிகப்பெரிய வெற்றி முறியடித்தது.
சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இதே தினத்தில் 2025-ம் ஆண்டு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி, ஏற்கெனவே இங்கிலாந்து தொடரை இழந்திருந்தாலும் முக்கியமான உலக...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 4-6, 6-0, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 72-ம் நிலை வீரரான போர்ச்சுகலின் ஜெய்மி ஃபாரியாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-1, 6-3, 7-5...









