பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள காஞ்சிபுரம் மாணவி துளசிமதி, அடுத்த பாராலிம்பிக்கில் நிச்சயம் தங்கம் வெல்வதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் துளசிமதி(24). இவர் கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். கை ஊனமுற்ற இவர் பேட்மிண்டன் போட்டியில் ஆர்வம் கொண்டவர். இவரதுதந்தை முருகேசன் விளையாட்டுக்கு பயிற்சி அளிப்பவர்.தனதுமகளுக்கு பேட்மிண்டன் போட்டிகளில் ஆர்வம் இருப்பதை அறிந்து விளையாட்டில்...
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்கின் மாநில அளவிலான தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று ராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி - மதுரை மண்டல ஒருங்கிணைந்த அணிகள் மோதின. இதில் சையதுஅம்மாள் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி தரப்பில் சிவஸ்ரீதர் (13-வது நிமிடம்), சுக்கிந்தன்...
3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 2025-ம் ஆண்டு ஜூன் 11 முதல் 15-ம்தேதி வரை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 16-ம் தேதி ரிசர்வ் நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.2021-ம் ஆண்டு சவுத்தாம்படனிலும், 2023-ம்ஆண்டு ஓவல் மைதானத்திலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்பட்டிருந்தது. இந்த இரண்டு இறுதிப் போட்டியிலும்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 8-ம் நாளில் நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 14-ம் நிலைவீரரான அமெரிக்காவின் டாமி பாலை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 7-6 (7-3),7-6 (7-5), 6-1 என்ற செட் கணக்கில்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில்முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ’கான்னெல்லுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். 14-ம்...
இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் கொச்சி அணியைச் சேர்ந்த ஹக் பார்ட்டர் முதலிடம் பிடித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று முன்தினம் தீவுத்திடல் பகுதியில் பயிற்சி சுற்றுகளுடன் தொடங்கியது. தெற்கு ஆசியாவில் முதன் முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயமாக இது...
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரில் தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ப்ரீத்தி பால் நேற்று (செப்.1) நடந்த மகளிருக்கான 200 மீட்டர் (T35 பிரிவு) ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்று மேலுமொரு சாதனை படைத்துள்ளார். முன்னதாக கடந்த ஆக.30 அன்று நடந்த மகளிருக்கான 100 மீட்டர் (T35 பிரிவு) 23 வயதான ப்ரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்றிருந்தார்....
புச்சிபாபு கிரிக்கெட் போட்டியில், டிஎன்சிஏ லெவன், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை,அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டிஎன்சிஏ லெவன் அணி முதல் 379 ரன்களும், மும்பை அணி 156 ரன்களும் எடுத்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ லெவன் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 510 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம்...
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 7 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துடெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று...
தெற்கு ஆசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர சாலை பார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த போட்டி இன்றும் (31-ம் தேதி), நாளையும் (செப்டம்பர் 1) நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் இதுவாகும்....