இந்தியா யு–19 அணி 411 ரன்கள் குவிப்பு

0
9

 இந்​தியா யு-19 – இலங்கை யு-19 அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வரு​கிறது. முதலில் பேட் செய்த இந்​தியா யு-19 அணி முதல் நாள் ஆட்​டத்​தில் 65 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 253 ரன்கள் எடுத்​திருந்​தது. குஷாக்ரா ஓஜா 103, மனால் சவு​கான் 55 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா யு-19 அணி 105.2 ஓவர்​களில் 411 ரன்​கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்​ட​மிழந்​தது. மனால் சவு​கான் 244 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 20 பவுண்​டரி​களு​டன் 150 ரன்​களும், குஷாக்ரா ஓஜா 193 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 111 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர்.

இலங்கை யு-19 அணி தரப்​பில் ஜிம்​ஹான் மெண்​டிஸ் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். இதையடுத்து பேட்​டிங் செய்த இலங்கை யு-19 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 40 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 122 ரன்​கள் எடுத்​தது. திமந்தா மகா​விதனா 24, அவீஷா சமஷ் 9, செனுஜா வெகுனகோடா 5, கேப்​டன் விமத் தினசரா 8, கவிஜா கமகே 7, விரான் சாமு​திதா 21, துல்​னித் சிகேரா 31, ஜேசன் ஃபெர்​னாண்டோ 0 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

சேத்​மிகா செனே​விரத்னே 4, ஜிம்​ஹான் மெண்​டிஸ் 4 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். இந்​தியா யு-19 அணி தரப்​பில் பிரணவ் ராகவேந்​தி​ரா, சிகுருபதி வெங்​க​டா, ரோஹித் யாதவ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். காவ்யா பரேஷ் படேல், ஜெக​நாதன் ஹேம்​சுதேசன் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். கைவசம் 2 விக்​கெட்​கள் இருக்க 289 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் இன்று 3-வது நாள் ஆட்​டத்தை விளை​யாடு​கிறது இலங்கை யு-19 அணி.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here