தடைகளை தாண்டி பதக்க மேடை ஏறிய ராஜா!

0
16

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆடவருக்கான 65 கிலோ எடைப் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று நாட்​டுக்கு பெருமை சேர்த்​துள்​ளார் 26 வயதாகும் ராஜா முத்துப்பாண்டி. இந்​திய ரயில்வே ஊழிய​ரான ராஜா, தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்​டி​யில் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 12-ல் பிறந்​தார்.

சிறு வயதிலேயே பளுதூக்​கும் விளை​யாட்​டின் மீது கொண்ட ஆர்வத்​தால், முறை​யான பயிற்​சிகளை மேற்​கொண்டு ஜூனியர் பிரிவு​களில் பல்​வேறு சாதனை​களை படைத்​தார். 2017-ம் ஆண்டு காமன்​வெல்த் இளை​யோர், ஜூனியர் சாம்​பியன்​ஷிப் போட்டிகளில் தங்​கம் மற்​றும் வெள்​ளிப் பதக்​கங்​களை வென்றார்.

இவரது அபாரத் திறமையால், 2018-ல் ஆஸ்திரேலி​யா​வின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்டிக்​கான இந்​திய அணி​யில் வாய்ப்பு கிடைத்​தது. தனது முதல் காமன்​வெல்த் தொடரிலேயே 62 கிலோ பிரி​வில் பங்​கேற்ற ராஜா 6-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார்.

எனினும் கடின பயிற்​சிகளின் வாயி​லாக 2019-ல் தேசிய சாம்​பியன்​ஷிப் பட்​டம் வென்று தனது தரத்தை உயர்த்​திக் கொண்டதுடன் இந்​திய பளுதூக்​கும் உலகின் வளர்ந்து வரும் இளம் நட்​சத்​திர​மாக உரு​வெடுத்​தார். வெற்​றிகளை நோக்​கிச் சக்கரத்​தைக் சுழற்​றத் தொடங்​கிய வேளை​யில், 2019 காமன்​வெல்த் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யின் போது ராஜாவுக்கு மிகப்​பெரிய பின்​னடைவு ஏற்​பட்​டது. ‘ஸ்​னாட்ச்’ பிரி​வில் எடையைத் தூக்​கும் போது, அவரது வலது முழங்​கை​யில் தசை​நார் கிழிவு ஏற்​பட்​டது.

காயத்​துக்கு ராஜா, உடனடி​யாக அறுவை சிகிச்சை செய்​து​கொண்​டார். ஆனால், எதிர்​பா​ராத​வித​மாக உலகையே முடக்​கிய கோவிட் பெருந்​தொற்​று, அவரது மறு​வாழ்​வுப் பயிற்​சியை வெகு​வாகத் தாமதப்​படுத்​தி​யது. உத்​தரபிரதேச மாநிலம் மோடி நகர் தேசிய பயிற்சி முகாமில் இருந்து வெளி​யேற வேண்​டிய சூழ்​நிலை ஏற்​பட்ட போதி​லும், மனம் தளராமல் சொந்த செல​வில் தனிப்​பட்ட முறை​யில் பயிற்​சிகளை மேற்​கொண்டு மீண்​டும் களத்​துக்கு திரும்​பி​னார்.

2022-ம் நடை​பெற்ற தேசிய சாம்​பியன்​ஷிப்​பில் பதக்​கம் வென்ற போதி​லும், துர​திர்​ஷ்ட​வச​மாக அந்த ஆண்டு நடை​பெற்ற காமன்​வெல்த் போட்​டிக்​கான இந்​திய அணி தேர்​வில் நூலிழை​யில் வாய்ப்பை இழந்​தார். சோதனை​கள் இத்​துடன் முடிய​வில்​லை, இதே ஆண்​டில் ராஜாவுக்​குக் கடுமை​யான மஞ்​சள் காமாலை பாதிப்பு ஏற்​பட்​டது. இதில் இருந்து அவர், குணமடைந்து வெளியே வரு​வதற்​குள் குடல்​ வாலழற்சி ஏற்​பட்டு மீண்​டும் ஒரு அறுவை சிகிச்​சையை எதிர்​கொண்​டார்.

தொடர்ந்து 10 மாதங்​கள் பயிற்​சியே செய்ய முடி​யாமல் படுக்கையில் முடங்கிய சூழலில், ‘இனி பளுதூக்​கு​வது சாத்​தி​யமா விளை​யாட்டை விட்டு வில​கி​விடலா​மா‘? என்று தீவிர​மாக யோசிக்கும் அளவுக்கு மன வேதனை அடைந்​தார் ராஜா. ஆனால், மனம் தளராமல் உடல்​நலம் தேறியதும் இரட்​டிப்பு வேகத்​துடன் பயிற்​சிகளைத் தொடங்​கி​னார்.

இதன் பலனாக 2025-ம் ஆண்டு அகம​தா​பாத் காமன்​வெல்த் சாம்​பியன்​ஷிப்​பில் 296 கிலோ எடையைத் தூக்கி வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். அதே ஆண்டு நார்​வே​யில் நடை​பெற்ற உலகச் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில், தனது வாழ்​நாளின் சிறந்த செயல்திறனை வெளிப்​படுத்தி 299 கிலோ (ஸ்​னாட்ச் 130 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 169 கிலோ) தூக்கி ஒட்​டுமொத்​த​மாக 9-வது இடத்தையும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரி​வில் உலக அளவில் 5-வது இடத்தை​யும் பிடித்து அசத்​தி​னார்.

கடந்த பிப்​ர​வரி மாதம் மோடிநகரில் நடை​பெற்ற 20-வது சீனியர் தேசிய பளுதூக்​கும் சாம்​பியன்​ஷிப்​பில் அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​னார் ராஜா. இந்த தொடரில் 65 கிலோ பிரி​வில் பங்​கேற்ற ராஜா, ஒட்​டுமொத்​த​மாக 302 கிலோ (ஸ்​னாட்ச் 130 கிலோ + கிளீன் அன்ட் ஜெர்க் 172 கிலோ) எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனை படைத்​துத் தங்​கம் வென்​றிருந்​தார்.

கடந்த 8 வருடங்​களுக்கு முன்​னர் பதக்​கம் வெல்ல முடி​யாமல் திரும்​பிய ராஜா அதே மேடை​யில் தற்​போது வெள்​ளிப் பதக்​கம் வென்று நாட்டை பெரு​மைப்​படுத்தி உள்​ளார். ராஜா​வின் அடுத்த இலக்கு வரும் செப்​டம்​பரில் நடை​பெறும்​ ஆசிய விளையாட்​டு போட்​டியிலும்​ அதைத்​ தொடர்​ந்​து 2028-ல்​ நடைபெறும்​ லாஸ்​ஏஞ்​சல்​ஸ்​ ஒலிம்​பிக்​கிலும்​ எப்​படி​யாவது பதக்​க மேடையை அலங்​கரித்​துவிட வேண்​டும்​ என்​பது​தான்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here