ஆசிய சாம்பியன்​ஷிப் இளை​யோர் ஹாக்கி-5ஸ்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெள்ளி

0
16

ஓமனின் மஸ்​கட்​டில் நடை​பெற்று வரும் ஆசிய சாம்பியன்​ஷிப் இளை​யோர் ஹாக்கி-5ஸ் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி வெள்​ளிப் பதக்​கத்தை வென்​றது.

மஸ்​கட் நகரில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் சீனா 4-2 என்ற கோல் கணக்​கில் இந்​திய அணியை வீழ்த்தி தங்​கம் வென்றது. சீன அணி தரப்​பில் டாங்​டாங் லு, கெக்​சின் டாங், ஜியாக்​சின் குவா, சென் கே ஆகியோர் தலா ஒரு கோலடித்​தனர். இந்​திய அணி தரப்​பில் நவுஷீன் நாஸ், புஷ்பா மஞ்சி ஆகியோர் தலா ஒரு கோலடித்​தனர்​. வெள்ளி வென்ற இந்திய அணிக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here