தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும்குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர், இளநிலைப்பொறியாளர் உள்ளிட்ட பணிகளில்2,455 காலி இடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக, அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட்டது
இந்நிலையில், வினாத்தாள்களின் உறைகள் மற்றும் வினாத்தாள்களில் சீல் பிரிக்கப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் தேர்வர்களுக்கும், மையப் பொறுப்பாளர்களுக்கும்...
தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் சி.கே.மோகன், பொதுச் செயலாளர் எஸ்.வாசுதேவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மானியக் கோரிக்கையில் 7 சதவீத வட்டி விகிதத்தில் கலைஞர் கடனுதவி திட்டம்,...
பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் உணவு, மளிகை பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு பெருநிறுவனங்களின் செயலிகளை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதேபோல், செயலி மூலமாக முன்பதிவு செய்து வாடகை வாகனங்கள் மூலம் பயணங்களையும் மேற்கொள்கின்றனர். இவ்வாறான செயலிகள் மூலமாக இயங்கும் நிறுவன ஊழியர்களின் தேசிய அளவிலான கூட்டம், சென்னையில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் இந்தியன் பெடரேஷன்ஆப் ஆப்-பேஸ்ட் ட்ரான்ஸ்போர்ட் ஒர்க்கர் அமைப்பின்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் 2022 ஜூலை 13-ம் தேதி ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையொட்டி, பள்ளி வளாகத்தில்கலவரம் ஏற்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டன.
இது தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. பள்ளி கலவரம்தொடர்பாக வாட்ஸ்அப் குழுஅமைத்து, கலவரக்காரர்களைஒருங்கிணைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார், அனைத்துவித உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்; ஏஐசிடிஇ சார்பில் ஆண்டுதோறும் கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழகங்கள்,கல்லூரிகள் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத்தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து...
நடக்காத விஷயத்துக்காக மீண்டும் தீர்மானம்: நீட் விலக்கு மசோதா குறித்து பாஜக எம்எல்ஏக்கள் விமர்சனம்
admin - 0
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேச பேரவைத் தலைவர் வாய்ப்பு தராததால் பாஜக உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பாஜக உறுப்பினர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் கூறியதாவது:
நீட் தேர்வு வேண்டாம் என்றுமுதல்வர் இன்று மீண்டும் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க ரூ.1 கோடி, முதுகலை படிப்புக்கு ரூ.5 கோடி வரை செலவாகிறது. ஏழை மாணவர்கள் படிக்கும்...
கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது.
கோவை மாவட்டம் மருதமலையில் கடந்த மாதம் 31-ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் ஐந்து நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு தாய் யானை வனப்பகுதிக்குள் கூட்டங்களுக்குள் விடப்பட்டது.
பின்னர் அந்த தாய் யானையுடன் சுற்றி வந்த குட்டி ஆண் யானையும் வனத்துறையினர்...
பந்தலூரில் 298 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் இன்று (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. உதகை குன்னூர் கோத்தகிரி குந்தா பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக பந்தலூரில் அதிக கன மழை பெய்துள்ளது.
இன்று...
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கல்வியியல் துறைத் தலைவர் பதவிக்கு உரிய தகுதியும், பணிமூப்பும் கொண்ட தனலட்சுமி என்ற பேராசிரியையை புறக்கணித்து விட்டு, வெங்கடேஸ்வரன் என்ற...
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி நடத்த மத்திய பிரதேசத்தைவிட குறைவான நிதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
admin - 0
தமிழக சட்டப்பேரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் நேற்று பதில் அளித்து, அத்துறையின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் முதல்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இவ்வளவு சிறப்பான ஒரு கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை நான் எங்குமே பார்த்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுப் பாராட்டினார். இந்த கேலோஇந்தியா விளையாட்டு போட்டியை நடத்த மத்தியப் பிரதேச...










