தனியார் பள்ளி கலவர வழக்கு: விசிக பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

0
181

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் 2022 ஜூலை 13-ம் தேதி ஒரு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையொட்டி, பள்ளி வளாகத்தில்கலவரம் ஏற்பட்டு, உடமைகள் சூறையாடப்பட்டன.

இது தொடர்பான வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமைகுற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. பள்ளி கலவரம்தொடர்பாக வாட்ஸ்அப் குழுஅமைத்து, கலவரக்காரர்களைஒருங்கிணைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் திராவிட மணி மற்றும் மாணவியின் தாயார் ஆகியோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு, திராவிட மணிக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், திராவிடமணி தனது வழக்கறிஞர்களுடன் கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகே உள்ள கள்ளக்குறிச்சி கனியாமூர் கலவர விசாரணை சிறப்புப் புலானாய்வுக் குழு அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்.