சென்னையில் தொடங்கிய மாம்பழ திருவிழா: பல்வேறு மாநிலங்களின் 25-க்கும் மேற்பட்ட வகைகள் விற்பனை

0
21

இந்​தி​யா​வின் மாம்பழ பாரம்​பரி​யத்​தைக் கொண்​டாடு​வோம்’ என்ற தலைப்​பில் நாட்​டின் பல்​வேறு மாநில தோட்​டங்​களி​லிருந்த பறிக்​கப்​பட்ட சுவை மிகுந்த மாம்​பழங்​களை சென்னை மக்​களுக்கு நேரடி​யாக வழங்​கும் வித​மாக, நபார்டு வங்கி மற்​றும் அதன் துணை நிறு​வன​மான நப்​கி​சான் ஃபை​னான்ஸ் சார்​பில் ‘மாம்பழ திரு​விழா – 2026’ சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள எக்​ஸ்​பிரஸ் அவென்யூ வணிக வளாகத்​தில் நேற்று தொடங்​கியது.

இதில் தமிழகம், ஆந்​திரப் பிரதேசம், கேரளா, கர்​நாட​கா, மத்​தி​யப் பிரதேசம் மற்​றும் சத்​தீஸ்​கர் ஆகிய மாநிலங்​களின் பிரசித்தி பெற்ற அல்​போன்​சா, மல்​கோ​வா, இமாம்​பசந்த், பங்​க​னபள்​ளி, செந்​தூ​ரா, ருமானி, மல்​லி​கா, நீலம், ரஸ்​வாலி, பெங்​களூரா உள்​ளிட்ட 25-க்​கும் மேற்​பட்ட மாம்பழ வகைகள் 16 அரங்​கு​களில் குவிக்​கப்​பட்​டுள்​ளன. ஜூன் 14 வரை 3 நாட்​களுக்கு காலை 10 மணி​முதல் இரவு 11 மணிவரை கண்​காட்சி நடை​பெறுகிறது.

மாம்பழ திரு​விழா​வைத் தொடங்கி வைத்து பார்​வை​யிட்ட வேளாண்மை மற்​றும் உழவர் நலத்துறை அமைச்​சர் ஆர்​.​வினோத், நிகழ்ச்​சி​யில் பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த 8 உழவர் உற்​பத்​தி​யாளர் நிறு​வனங்​களுக்கு ரூ.2.25 கோடிக்​கான கடனுதவி​களை வழங்​கி​னார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் 1.45 லட்​சம் ஹெக்​டேர் பரப்​பில் மாம்பழம் சாகுபடி செய்​யப்​பட்​டு, 9.49 லட்​சம் டன் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது.

இதையொட்டி தேசிய தோட்​டக்​கலை இயக்​கத்​தின் கீழ் புதி​தாக ‘மா’ நடவு செய்​யும் விவ​சா​யிகளுக்கு ஒரு ஹெக்​டேருக்கு ரூ.30 ஆயிரம் வரை​யும், குறைந்த இடைவெளி​யில் அதிக மாங்​கன்​றுகளை நடவு செய்​யும் விவ​சா​யிகளுக்கு ஒரு ஹெக்​டேருக்கு ரூ.48 ஆயிரம் வரை​யும், பழைய மாந்​தோட்​டத்தை புதுப்​பிக்க ஒரு ஹெக்​டேருக்கு ரூ.20 ஆயிரம் வரை​யும் மானி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

தொடர்ந்து ‘மா’ ஏற்​றும​திக்​கான உட்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்த பல்​வேறு துறை​களு​டன் இணைந்து கிருஷ்ணகிரி, தரு​மபுரி, திண்​டுக்​கல், தேனி, வேலூர், திரு​வள்​ளூர் மற்​றும் சேலம் மாவட்​டங்​களில் ‘மா’ சிறப்​புக் குழுக்​கள் அமைக்​க​ வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

தற்​போது 162 டன்​னாக உள்ள மாம்பழ ஏற்​றும​தியை அடுத்த 5 ஆண்​டு​களில் 1000 டன்​னாக​வும், பதப்​படுத்​தப்​பட்ட ‘மா’ பொருட்​களின் ஏற்​றும​தியை 75 ஆயிரம் டன்​னில் இருந்து 1.46 லட்​சம் டன்​னாக​வும் உயர்த்த திட்​ட​மிட்​டுள்​ளோம் என்று அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் தோட்​டக்​கலைத் துறை இயக்​குநர் ஜெ.​விஜயா ராணி, நபார்டு வங்​கி​யின் பொது மேலா​ளர் எஸ்​.எஸ்​.வசீகரன், தலை​மைப் பொது மேலா​ளர் ஹெச்​.மனோஜ், இந்​திய ரிசர்வ் வங்​கி​யின் பொது மேலா​ளர் சுப்​பிரமணி​யன், நப்​கி​சான் மூத்த துணைத் தலை​வர் மோகன் கார்த்​திக், துணை தலைமை நிதி அதி​காரி ஆர்​.கே.சுரேஷ் ராமலிங்​கம்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here