சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.
சென்னை ஓட்டேரி, பிரிக்லின் சாலையில் தேங்கிய மழை நீர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கிய நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக...
சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகள் குறித்து அரசு அலுவலர்களுக்கு சென்னையில் நேற்று பயிற்சி வழங்கப்பட்டது. தமிழகம் 1076 கிமீ அளவில் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக உள்ளது. இப்பகுதியில் ஏராளமான புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.
விதிகளை மீறியும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் மீனவ சமுதாயம் மற்றும் பிற உள்ளூர் சமுதாயங்களுக்கான வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இவர்களை பாதுகாக்கவும், விதிமீறல்களை தடுக்கவும், புதிய திட்டங்களுக்கு உரிய...
11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
admin - 0
தமிழகத்தில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிநவீன ஆய்வகங்கள் அமைக்க ரூ.12.38 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரால் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் வகுத்து கொடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2024-2025-ம் நிதி ஆண்டு உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின்படி மாநிலத்தில் உள்ள 11...
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரே நாளில் 1000 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவுள்ளதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த சில மாதங்களாகவே நிர்வாகிகள் கொத்து கொத்தாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்பு, நாம் தமிழரில் இருந்து விலகி, தவெகவில் சேரும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கட்சி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக ஒரே...
தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் பேசியதாவது:இந்தியாவின் முன்னணி திரைப்பட விழாவாக சென்னை சர்வதேச திரைப்பட விழா மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, திரைப்பட விழாவுக்கு முதன்முதலாக நிதியுதவி வழங்கினார். 2023-ம் ஆண்டு நிதியுதவியை ரூ.85...
கனமழை காரணமாக தென்காசியை ஒட்டிய தமிழக - கேரள எல்லையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் தொடர் கனமழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளையனரேந்தல் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக...
கன்னட எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வைக்கம் விருது அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்
admin - 0
இந்த ஆண்டுக்கான வைக்கம் விருது கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறி்த்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: சட்டப்பேரவையில் கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்கள்...
27 மாவட்டங்களில் இன்று கனமழை; மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று: வானிலை மையம் சொல்வது என்ன?
admin - 0
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா உட்பட தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை...
சனாதன தர்மமும் அதன் ஆன்மீக விழுமியங்களும்தான் நம் நாட்டின் முக்கிய பலம். பாரதத்தை விஸ்வ குருவாக மாற்ற வேண்டும் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்ற அனைத்து பாரதிய மொழிகளையும் வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.
பாரதியாரின் 143-வது பிறந்தநாள் மற்றும் இந்திய மொழிகள் தினவிழா ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில், ஆளுநர்...
முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளாவில் உற்சாக வரவேற்பு: வைக்கம் பெரியார் நினைவகத்தை இன்று திறக்கிறார்
admin - 0
வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவக திறப்பு விழாவுக்காக கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1924-ல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற கோயில் நுழைவு போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பெரியார் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. அப்போராட்டத்தை நினைவுகூரும் விதமாக, தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் சிலை அமைக்கப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது....









