Google search engine
விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா, நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம், அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘மகாராஜா’. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இதை பேஷன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்துள்ளார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது: இந்தப் படத்தின் கதையை கேட்கும்போது பெரிய பிரமிப்பும் நம்பிக்கையும் இருந்தது. ஒவ்வொரு படத்துக்கு முன்னும்...
அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், மதுமிளா, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குநர் திருமலை தயாரித்துள்ளார். படம்பற்றி இயக்குநர் பாலாஜி கேசவன் கூறும்போது, "நான் எழில், லிங்குசாமி ஆகியோரிடம் பணியாற்றினேன். இது எனக்கு...
தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறி இருந்தார். கூடவே, ட்ரலலலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை நடித்து தயாரிக்க இருப்பதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் கோவை ஈஷா மையத்துக்குச் சென்ற சமந்தா, அங்கு தியானம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்....
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது....
தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கேன், இளங்கோ குமாரவேல் உட்பட பலர் நடித்த படம், கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் ‘கேப்டன் மில்லர்’ படமும்...
3-வது முறையாக பொறுப்பேற்று கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை சரியாக 7.23 மணிக்கு நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின்...
ரஜினி நடித்துள்ள 'வேட்டையன்', அக். 10-ம் தேதி ரிலீஸாகிறது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சுவாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது.அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் சத்யராஜ், ரஜினியின்...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படத்தை ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனின் 23-வது படமான இதில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். மலையாள நடிகர் பிஜு மேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் வில்லனாக இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் படக்குழு...
பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘ரயில்’ திரைப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் தலைப்பு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்மகன்’, ‘நான் மகான் அல்ல’ உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கும் பாஸ்கர் சக்தி, தேசிய விருதுபெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ படத்துக்கு கதை, வசனம் எழுதியிருந்தார். அவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘வடக்கன்’. இதில் குங்குமராஜ், வைரமாலா ஜோடியாக நடித்துள்ளனர்....
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்ட மோகன், 80களில் கொடிகட்டி பறந்த நடிகர். 90களில் அவர் நடித்த படங்கள் கைகொடுக்காமல் போகவே சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். 2008-ல் வெளியான ‘சுட்டப் பழம்’ படம்தான் அவர் திரையில் தோன்றிய கடைசி படம். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது ‘ஹரா’. கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து...