ஞானம் வேண்டுமென்றால்… – சமந்தா அறிவுரை

0
267

தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாகக் கூறி இருந்தார். கூடவே, ட்ரலலலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தை நடித்து தயாரிக்க இருப்பதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் கோவை ஈஷா மையத்துக்குச் சென்ற சமந்தா, அங்கு தியானம் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், ‘நம்மில் பலர் குரு அல்லது வழிகாட்டியை தேடுகிறோம். உங்கள் வாழ்வை ஒளிரச் செய்யும் தீவிரம், இரக்கம் கொண்டவர்களை கண்டால்அது பாக்கியம். உங்களுக்கு ஞானம் வேண்டுமென்றால் நீங்கள்தான் அதை இவ்வுலகில் தேட வேண்டும். அது சாதாரணமானது அல்ல. அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.