“பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திக்காததில் வருத்தம்” – இயக்குநர் சேரன்

0
21

எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வர் விஜய் சந்திக்காததில் சற்று வருத்தம் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு எடப்பாடி பழனிசாமி. ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என வல்லுநர்கள் ஆரூடம் சொன்னபோது 4 வருடம் ஆட்சி கவிழாமல் காப்பாற்றி அதிமுக மானம் காத்த செயல் வீரர். கடந்த தேர்தலில் இவர் மட்டுமே ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை செய்து மக்களை சந்தித்தார்.

கூடவே இருந்த கட்சியினர் இவரை தனித்து விட்டாலும் கலங்கிவிடமாட்டார். அது அவருக்கு புதிதுமல்ல. எல்லோரையும் பார்க்கும் இன்றைய முதலமைச்சர், கரூர் சம்பவத்தின்போது முதலில் அவர் பக்கம் நின்ற எடப்பாடியாரை சென்று பார்க்காமல் நிராகரித்தது சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவையெல்லாம் கடந்தும் அவர் நிற்பார்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சேரன்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here