ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறதா ‘தங்கலான்’?

0
130

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. இதே தேதியில் ‘புஷ்பா 2’ படம் வெளியாக இருக்கிறது.