இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’

0
111

தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், அதிதி பாலன், ஜான் கொக்கேன், இளங்கோ குமாரவேல் உட்பட பலர் நடித்த படம், கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து தேசிய திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் ‘கேப்டன் மில்லர்’ படமும் பூமி பட்னேகர் நடித்த ‘பக்‌ஷக்’ என்ற இந்தி படமும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.