பிரபல டப்பிங் கலைஞர் ரவீணா ரவி, நடிகைகள் சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால் உள்பட பல கதாநாயகிகளுக்கு தமிழ், மலையாளப் படங்களில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
’ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து, ‘ராக்கி’, ‘வீரமே வாகை சூடும்’, ‘லவ் டுடே’, ‘மாமன்னன்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தேவன் ஜெயக்குமார் இயக்கிய ‘வாலாட்டி’ என்ற மலையாளப் படத்தில் டப்பிங் பேசினார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை 2024ம் ஆண்டு அக்டோபரில் இருவரும் உறுதிப்படுத்தினர். இந்நிலையில், ரவீணா ரவி – தேவன் ஜெயக்குமார் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. அவர்கள் திருமணத்துக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திருமணத்துக்கு பிறகும் ரவீணா நடிப்பு மற்றும் டப்பிங்கில் தொடர்ந்து ஈடுபடுவார். ரவீணா ரவியின் அம்மா ஸ்ரீஜா ரவியும் 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.















