சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ திரைப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். ‘சகாப்தம்’ மற்றும் ‘மதுர வீரன்’ ஆகிய படங்களின் மூலம் நாயகனாக அறியப்பட்டவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தற்போது ‘படை தலைவன்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 23-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அன்பு இயக்கியுள்ள இப்படத்தில் சண்முக பாண்டியன், கஸ்தூரி...
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் சாதிப் பிரச்சினைகளை பேசும் ரீதியான கதைகளே வருகின்றன என்று இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் தெரிவித்தார். அனன்யா அம்சவர்தன் தயாரிப்பில், கரீஷ்மா இயக்கத்தில் ‘கன்னி’ என்ற குறும்படம் உருவாகியுள்ளது. 90-களைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை பேசும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ’சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “ஒரு குறும்படம் என்கிற...
‘96 பார்ட் 2’ படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம்குமார் இயக்கத்தில் ‘96’ படத்தின் 2-ம் பாகம் உருவாகவுள்ளது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இதிலும் நடிக்கவுள்ளார்கள். தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்கு முதலில் பி.சி.ஸ்ரீராம் தான் ஒப்பந்தமாகி இருந்தார். பின்பு உடல்நிலை...
அடுத்ததாக புதுமுகங்கள் நடிக்க, காதல் பின்னணியில் படம் ஒன்றை இயக்க மணிரத்னம் முடிவு செய்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன். ‘தக் லைஃப்’ முடித்துவிட்டு அடுத்ததாக காதல் பின்னணியில்...
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டு வார வசூல் என்ன என்பதை படக்குழு அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் ‘குட் பேட் அக்லி’ நல்ல வசூல் செய்து வருகிறது. மேலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அவ்வப்போது வசூல் நிலவரத்தை அறிவித்து வருகிறார்கள். தற்போது 2 வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூ.172.3 கோடி வசூல் செய்திருப்பதாக தமிழக விநியோகஸ்தர் ராகுல் அவரது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். இது அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகமாக்கி உள்ளது. ‘விஸ்வாசம்’...
‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்ற ‘வீரா ராஜ வீரா’ பாடல் காப்புரிமை தொடர்பான வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கிளாசிகல் பாடகர் ஃபயாஸ் வாசிஃபுதீன் தாகர் கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்...
அரசன் கோட்டை என்ற ஊரில்உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவி காணாமல் போகிறார். இவ்வழக்கைக் காவல்துறை கண்டு கொள்ளாத நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் சுஜிதா (கேத்ரின் தெரசா), மாணவி மாயமானது குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் சட்டவிரோதச் செயல்கள் பற்றியும், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார்அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து அந்தப் பள்ளிக்கு புதியஉடற்கல்வி ஆசிரியராகப் பணியில் இணைகிறார் சரவணன் (சுந்தர்.சி). இவருடன் சுஜிதாவும் மற்றொரு உடற்கல்வி...
டாம் க்ரூஸ் நடித்துள்ள ‘மிஷன் இம்பாசிபிள் 8’ திரைப்படம் இந்தியாவில் ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்த படங்களின் பட்டியலில் ‘மிஷன்: இம்பாசிபிள்’ சீரிஸ் படங்கள் எப்போதும் உண்டு. ஆக்‌ஷன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அந்த வகையில் இந்தப் படத்தில் 7-ம் பாகமாக ‘மிஷன்: இம்பாசிபிள்- டெட் ரெகனிங் (பாகம்...
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு நடிப்பில் மே 1-ல் வெளியாகவுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ட்ரெய்லர் ‘டார்க் காமெடி’ வகைமையில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதில், ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், இசையமைப்பாளராக ஷான்...
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பாலிவுட் சினிமா நடிகர் அனுபம் கெர் கூறியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். “பஹல்காமில் இந்து மக்கள் ஒவ்வொருவராக சுட்டு கொல்லப்பட்டது ஆழ்ந்த துயரத்தை தருகிறது. இந்த கொடுஞ்செயலை செய்தவர்கள்...