எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தில் உதவி இயக்குநராக அசோக் செல்வன்

0
375

அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், மதுமிளா, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி கிரியேஷன்ஸ் சார்பில் இயக்குநர் திருமலை தயாரித்துள்ளார்.

படம்பற்றி இயக்குநர் பாலாஜி கேசவன் கூறும்போது, “நான் எழில், லிங்குசாமி ஆகியோரிடம் பணியாற்றினேன். இது எனக்கு முதல் படம். சென்னையில் நடக்கும் ரொமான்டிக் காமெடி கதை. பொழுதுபோக்கை மட்டுமே மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கண்டதும் காதல் வருகிறது ஹீரோவுக்கு. அதைச் சொல்வதற்கு சில சிக்கல்கள். அடுத்து சில பிரச்சினைகள். அதிலிருந்து மீண்டு காதலர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் கதை. ஹீரோ அசோக் செல்வன் உதவி இயக்குநராகப் படத்தில் வருகிறார். நாயகி அவந்திகா செவிலியர்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருப்பதால் குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. விரைவில் படம் வெளியாக இருக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here