ராஜஸ்​தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழப்பு

0
22

பிரபல தயாரிப்​பாளர் ஆர்​.பி.சவுத்ரி (72) சாலை விபத்​தில் மரணமடைந்​தார். சூப்​பர் குட் பிலிம்ஸ் நிறு​வனம் சார்​பில் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடம், இந்​தி​யில் பல படங்​களைத் தயாரித்​தவர் ஆர்​.பி.சவுத்​ரி. ராஜஸ்​தானை சேர்ந்த இவர், பல படங்​களை விநி​யோகித்​தும் உள்ளார்.

தமிழில், 1990-களில் ஏராள​மான புதிய இயக்​குநர்​களை​யும் நடிகர், நடிகைகளை​யும் அறி​முகப்​படுத்​தி​ய​வர் இவர். விக்​ரமன் அறிமுகமான ‘புது​வசந்​தம்’, கே.எஸ்​.ரவி​கு​மார் அறி​முக​மான ‘புரியாத புதிர்’, சரத்​கு​மார் நடித்த ‘சேரன் பாண்​டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்​ய வம்​சம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்​காக’, பாலசேகரன் அறிமுகமான ‘லவ் டுடே’ உள்பட பல சூப்​பர் ஹிட் படங்​களைத் தயாரித்துள்​ளார்.

இப்​போது, விஷால் இயக்​கி, நடிக்​கும் ‘மகுடம்’ சூப்​பர் குட் பிலிம்ஸின் 99-வது திரைப்​படம். இதன் படப்​பிடிப்பு பெரும்​பாலும் முடிந்​து​விட்​டது. இந்​நிறு​வனத்​தின் 100-வது திரைப்​படத்தை விஜய் நடிப்​பில் தயாரிக்க இருப்பதாக ஆர்​.பி.சவுத்ரி அறி​வித்​திருந்​தார். அது நடக்​க​வில்​லை. பின்​னர், ‘சூர்​ய​வம்​சம்’ படத்​தின் 2-வது பாகத்தைத் தயாரிக்க இருந்​தார். இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்​தான் மாநிலம் உதய்ப்​பூருக்கு அவ்​வப்​போது சென்று வருவது வழக்​கம். சமீபத்​தில் அங்கு சென்ற அவர், நேற்று மாலை காரில் சென்​று​கொண்​டிருந்​தார்.

எதிர்​பா​ராத வித​மாக மாடு ஒன்று சாலை​யில் குறுக்​கிட்​ட​தால் ஓட்டுநர் காரை திருப்​பி​னார். அப்​போது பாலத்​தில் கார் மோதியது. இதைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்த ஆர்​.பி.சவுத்​ரிக்கு மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் அந்த இடத்​திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவர் மறைவு திரை​யுல​கில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் உள்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஆர்​.பி.சவுத்​ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவா ஆகிய மகன்​கள் உள்​ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here