விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஐஜேகே ஆதரவு

0
224

இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) தலைவர் ரவி பச்சமுத்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணிக்கு முழு ஆதரவு அளிப்போம்.

விழுப்புரம் மத்திய மாவட்டத் தலைவர் எம்.செந்தில்குமார் தலைமையில் ஐஜேகே நிர்வாகிகள் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களப்பணி ஆற்றுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.