குமரியில் ரேஷன் அரிசி கடத்தியதாக 126 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி கடத்திச் செல்லப்பட்டு வருகிறது. இதனை போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்திலிருந்து அரிசி கடத்தியதாக 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 217 டன் அரிசி பறிமுதல்...
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும், சத்தீஸ்கர் மாநிலத்தில் போராளிகள் மீது என்கவுண்டர் செய்த அந்த மாநில பாஜக அரசை கண்டித்தும் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் மாவட்ட நாகர்கோவில் மாநகர மோசஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
களியக்காவிளை: மாநில போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு
களியக்காவிளை அருகிலுள்ள வாறுதட்டு எம். எம். கே. எம். உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாநில அளவிலான சப்ஜூனியர் அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும்பொருட்டு குமரி மாவட்ட அளவிலான சப்ஜூனியர் மாணவர்களுக்கான அட்டயா பட்டயா...
அருமனை: பேரூராட்சி இரும்பு பொருட்களை விற்க முயற்சி
அருமனை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கிடந்த இரும்பு பைப்புகள், பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி சொந்தமான குப்பையெடுக்கும் வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றி அந்த பகுதியில் உள்ள ஆக்கர் கடைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் இது குறித்து விசாரித்தனர்.
அப்போது அதிகாரியின் அறிவுறுத்தல் பேரில் இவற்றை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக...
நித்திரவிளை: ஆறு உடைப்பு ; மண் நிரப்பும் பணி தீவிரம்
நித்திரவிளை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப் பெருக்கின் போது ஆறு திசை மாறி, கரை பகுதிகளை உடைத்து சென்றது. இதில் சில வீடுகள்...
குழித்துறை: வடிகால் கட்டுவதால் சாலை துண்டிப்பு
குழித்துறையிலிருந்து விளவங்கோடு பள்ளி முன்புறம் வழியாக அதங்கோட்டிற்கு செல்லும் சாலை உள்ளது. தற்போது இந்த சாலையில் அலங்கார ஓடுகள் பதித்து சீரமைக்கும் பணி சுமார் ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. அதன்பின் தொடர் மழையால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கியது.
இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால், தற்போது விளவங்கோடு...
கோட்டாறு பகுதியில் இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறில் இளங்கடை வடக்கு அரசு தொடக்கப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுக் கட்டடமான இந்தக் கட்டடம் ஒரு பகுதி இடிவிழுந்து, மற்ற பகுதிகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே,...
சின்னவிளை: கடற்கரை பகுதியினை பார்வையிட்ட கலெக்டர்
கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் கடந்த மே 25-ம் தேதி எம்எஸ்சி எல்சா 3 என்ற கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கண்டைனர்கள் அரபிக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக மூழ்கியது. இந்த கப்பலில் சில பொருட்கள் குறிப்பாக பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய மூட்டைகள், மரக்கட்டைகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட...
மணக்கரை: நான்குவழிச் சாலையில் விதிமுறைகளை மீறி டோல்பிளாசா
குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டம் 2026 க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற்று வருகின்றன. காவல்கிணறு-நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க, அந்த டோல் பிளாசாவிலிருந்து சுமார் 18 கி.மீ...
புதுக்கடை: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (55). நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு மற்றும் கடன் பிரச்சனையால் ரசல்ராஜ் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 8) வீட்டிலிருந்து வெளியே வேறு...













