களியக்காவிளை அருகிலுள்ள வாறுதட்டு எம். எம். கே. எம். உயர்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மாநில அளவிலான சப்ஜூனியர் அட்டயா பட்டயா விளையாட்டுப் போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்யும்பொருட்டு குமரி மாவட்ட அளவிலான சப்ஜூனியர் மாணவர்களுக்கான அட்டயா பட்டயா விளையாட்டுப்போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது. போட்டியில் வாறுதட்டு பள்ளி மாணவிகள் அபிஷிகா, அனுஷ்கா ஆகியோர் அட்டயா பட்டயா அணியில் பங்கேற்க தகுதி பெற்றனர். மேலும் விரைவில் மாநில அளவிலான அட்டயா பட்டயா போட்டியில் பங்கேற்கவிருக்கும் மாணவிகளை பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.