அருமனை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் கிடந்த இரும்பு பைப்புகள், பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி சொந்தமான குப்பையெடுக்கும் வாகனத்தில் ஊழியர்கள் ஏற்றி அந்த பகுதியில் உள்ள ஆக்கர் கடைக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் இது குறித்து விசாரித்தனர்.
அப்போது அதிகாரியின் அறிவுறுத்தல் பேரில் இவற்றை விற்பனை செய்ய கொண்டு வந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். பேரூராட்சி சொந்தமான பொருட்கள் ஏலம் விடாமல் ஆக்கர் கடையில் எப்படி விற்கலாம் என பொதுமக்கள் வாக்குவாதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஊழியர்கள் மீண்டும் பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சுமார் ஐந்து கிலோ எடை கொண்ட இரும்பு பொருட்கள் தான் வாகனத்தில் இருந்ததாக தகவல் தெரிவித்தனர்.