மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த லைசா (60) மற்றும் அவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகியோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று லைசா வீட்டின் வெளியே நின்றபோது, மெல்பின், மார்ஷல் மற்றும் சிபு ஆகியோர் தாய், மகனைத் தாக்கி காயப்படுத்தினர். படுகாயமடைந்த இருவரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.















