நித்திரவிளை ஆற்று பகுதியான கணியங்குழி பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதில் பக்கவாட்டு தடுப்பு சுவர் அமைக்காத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளப் பெருக்கின் போது ஆறு திசை மாறி, கரை பகுதிகளை உடைத்து சென்றது. இதில் சில வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. தற்போது ஆற்றில் தண்ணீர் குறைவான காலங்களில் கடல் நீர் உட்புகிறது. தற்போது அரசு 2 கோடி 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலின்படி கிராவல் மண் எடுத்து வந்து கணியங்குழி பகுதியில் ஆற்றின் கரை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.