மணக்கரை: நான்குவழிச் சாலையில் விதிமுறைகளை மீறி டோல்பிளாசா

0
69

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டம் 2026 க்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் நடைபெற்று வருகின்றன. காவல்கிணறு-நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவை ஒருபுறம் இருக்க, அந்த டோல் பிளாசாவிலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் மற்றொரு டோல் பிளாசா வில்லுக்குறிச்சி அருகேயுள்ள மணக்கரை என்ற பகுதியில் அமைக்கும் பணிகள் அந்தப் பகுதியில் சாலை பணிகள் நடைபெற்றபோதே நடந்து முடிந்துள்ளன. 

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நான்கு வழிச்சாலை விதிமுறைகளை மீறி டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் சுங்கச்சாவடியை திரும்பப் பெற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here