புதுக்கடை: கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

0
59

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (55). நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு மற்றும் கடன் பிரச்சனையால் ரசல்ராஜ் மனஉளைச்சலில் இருந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று (ஜூன் 8) வீட்டிலிருந்து வெளியே வேறு ஒரு நபர் தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் ரசல்ராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here