கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறில் இளங்கடை வடக்கு அரசு தொடக்கப்பள்ளியில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓட்டுக் கட்டடமான இந்தக் கட்டடம் ஒரு பகுதி இடிவிழுந்து, மற்ற பகுதிகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே, தற்போது தென்மேற்குப் பருவக்காற்று மழையும் தொடங்கியுள்ள நிலையில், இதனை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.