இரணியல்: 1கிலோ கஞ்சாவுடன் வாலிபர் – சிறையில் அடைப்பு
இரணியல் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பள்ளம்பாலம் அருகே ரெஜிஸ் (25) என்ற வாலிபரை மடக்கி விசாரித்தனர். அவரது பையில் 1 கிலோ 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கண்டன்விளை பகுதியைச் சேர்ந்த ரெஜிஸை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய...
குமரி: தேசிய ஹாக்கி போட்டியில் அரசுப் பள்ளி மாணவர் சாதனை
மத்திய அரசின் தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் கோவா மாநிலம் மபூசா பகுதியில் நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, மேக்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியின் 7 ஆம் வகுப்பு மாணவர் ஆட்வின் ரிஜோ பங்கேற்று இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றார். இந்த...
குமரி: நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது தாக்குதல்
கொல்லங்கோடு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபின் (32) நேற்று மதியம் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சஜின் (30) என்பவர் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பிரபின், குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
நாகர்கோவில் அருகே ஆட்டோ திருட்டு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனில் குமார் என்ற ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோ திருடு போனது. இரவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து அனில் குமார் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து...
குமரி: தென்னந்தோப்பில் வெட்டு காயங்களுடன் ஆண் பிணம்
ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில், உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் டிரைவர் கண்ணன் (47) என்பவரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. கோவில்புரம் பகுதியைச் சேர்ந்த இவர் திருமணமாகாதவர் என தெரிய வந்துள்ளது. இக்கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் தீவிர விசாரணை...
குலசேகரம்: தாயை தாக்கிய அரசு பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை
குலசேகரம் பகுதியை சேர்ந்த சபரிபாய் (77) என்பவரை அவரது மகன் மைக்கேல் தாசன் கடந்த 8.11.2016 அன்று கம்பியால் தாக்கிய வழக்கில், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி தனசேகரன், மைக்கேல் தாசனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.30,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். காயமடைந்த தாயார்...
கூட்டாலுமூடு: பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று தந்திரி சங்கரன் நம்பூதிரி தலைமையில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பொங்காலை, அம்மன் பவனி, பஜனை பட்டாபிஷேகம், அபிஷேக உறி விளையாட்டு ஆகியவை நடந்தன. இரவு யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி தலைமையில் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கான...
நித்திரவிளை: ரப்பர் தோட்டத்தில் திடீர் தீ ; நாச வேலையா?
நித்திரவிளை பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பரவியதை அடுத்து கொல்லங்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா என்பது...
பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி நேற்று முன்தினம் மாலை கல்லறை தோட்டம் மந்திரிப்பு, ஜெப மாலை, புகழ்மாலை, திருப்பலி ஆகியவை நடைபெற்றது. விழாவில் நேற்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை...
இரணியல்: 85 மது பாட்டில்களுடன் பெண் கைது
இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆளூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து சென்றனர். தோப்புவிளை பகுதியில் பபிலா என்ற பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவரது வீடு சோதனை செய்யப்பட்டது. அப்போது, அரசு அனுமதி இன்றி 85...












