நெல்லை, குமரியில் ராகுல் காந்தி பிரச்சாரம்

0
160

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி நாளை (சனிக்கிழமை) முதல் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் 20-ஆம் தேதியும் பிரசாரம் செய்ய உள்ளார். நாளை பொன்னேரி, சோளிங்கர், துறையூர் தொகுதிகளிலும், 20-ஆம் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் தொகுதிகளிலும் அவர் வாக்கு சேகரிக்கிறார். நாங்குநேரி தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராகுல் காந்தி இணைந்து பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here