மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்மநாபபுரம் தொகுதி அழகியமண்டபம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் திமுகவினர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியினரும் இதில் கலந்துகொண்டனர்.














