இரணியல் அருகே மது பதுக்கியவர் கைது
இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ், தலைமை காவலர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நடுத்தேரியில் வந்தபோது போலீசை கண்டதும் ஒருவர் நழுவி செல்ல பார்த்தார். உடனே சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடுத்தேரியை சேர்ந்த ரவி...
அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்த எம். எல். ஏ.
அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்குட்பட்ட கனகப்புரத்தில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம், அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெஸீம் அவர்கள் குமரி கிழக்கு மாவட்ட...
நாகர்கோவில் மாநகராட்சியில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், பாதாள சாக்கடை, சுகாதார கட்டிடங்கள், கிருஷ்ணன் கோவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், இதர திட்டப்பணிகள் முறையாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என ஆட்சியர் ஸ்ரீதர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்....
லாரியில் கேரளாவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் வடசேரி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரி சென்றது. போலீசாரை கண்ட அந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.
சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை...
நடைக்காவு ஊராட்சியில் சாலை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் தர்ணா
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் தேவன்சேரி - வயலங்கரை சாலை உள்ளது. இந்த சாலையில் துண்டு விளை என்ற பகுதியில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சாலை சீரமைக்க தமிழக அரசு ரூபாய் 4 லட்சம் நிதி ஒதுக்கி...
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் முற்றுகை
இரணியல் அருகே குருந்தன்கோடு இரட்டை கரை கால்வாய் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சாலையை செப்பனிடம் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வாழை நடும் போராட்டம், கண்டன முழக்க போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இருந்தும் இந்த சாலை இதுவரை சீரமைக்கப்படவில்லை. இந்த நிலையில் குருந்தன்கோடு...
குமரி எம். பி. யை வரவேற்ற மாநகராட்சி மேயர்.
கன்னியாகுமரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின் விஜய் வசந்த் எம். பி. முதல் முறையாக நேற்று நாகர்கோவில் வருகை தந்தார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் பார்வதிபுரம் பகுதியில்...
இரணியல் ரயில்வே நிலையத்தில் கடத்த முயன்ற அரிசி மீட்பு
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு கண்டன்விளை, இரணியல், திங்கள்நகர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். இரணியல் ரயில்வே...
குழித்துறையில் அரசு பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்
குழித்துறை பணிமனையில் இருந்து இயங்கூடிய இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களை பணிமனை மேலாளர் உரிய காரணங்கள் இன்றி பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிமனையில் இருந்து கன்னியாகுமரி பகுதிக்கு இயக்கப்படும் அரப் பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளதோடு, ஏற்கனவே 8 மணி...
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பேரவை கூட்டம் ஈத்தாமொழியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சொர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் ரவி சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒன்றிய தலைவராக எஸ். ஜெபமணி,...













