தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

0
51

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பேரவை கூட்டம் ஈத்தாமொழியில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சொர்ணம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆர் ரவி  சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. ஒன்றிய தலைவராக எஸ். ஜெபமணி, துணைத் தலைவர்களாக நாராயணன், பிரசாத், நளன், செயலாளராக எஸ் எஸ் பிள்ளை,   இணைச் செயலாளராக பௌலி, நாகராஜன், செந்தில்குமார்,   பொருளாளராக ராதாகிருஷ்ணன் ஆகிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் பறக்கின் கால்வாயை தூர்வாரி சீரமைத்திட ரூபாய் 4 கோடி சிறப்பு நிதி ஒதுக்கிடு செய்திடவும்,   சூரப்பள்ளம், கணபதிபுரம்,   ஆலங்கோட்டை வழியாக செல்லும் இரட்டைக் கரை கால்வாயை தூர் வாரவும்,   ஈத்தமொழி கயிறு ஆலையை நவீனப்படுத்தி மேம்படுத்தவும், சிறுகுறு  விவசாயிகள் வங்கி கடன் வாங்க தடையாக உள்ள சிபில் கோர் நடைமுறையை தளர்த்திடவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அறிவுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.