குமரியில் கிராம்பு, நல்ல மிளகு விலை ஏற்றம்

0
151

கீரிப்பாறை, காளிகேசம், கரும்பாறை, மாறாமலை, தடிக்காரன்கோணம், பகுதிகளில் கிராம்பு, நல்லமிளகு, ஜாதிக்காய் தோட்டங்கள் உள்ளன. குமரியில் கிராம்பு, நல்ல மிளகு, ஜாதிக்காய் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹700-க்கு விற்கப்பட்ட கிராம்பு நேற்று ₹1200, நல்லமிளகு ₹500ல் இருந்து ₹850, ஜாதிக்காய் ₹250ல் இருந்து ₹400 ஆகவும் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.