லாரியில் கேரளாவுக்கு கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

0
114

வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் வடசேரி சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.   அப்போது நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரி சென்றது. போலீசாரை கண்ட அந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.  

சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தொடர்ந்தது லாரியை சோதனை செய்தபோது, அதில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வடசேரி போலீசார் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே உணவு கடத்தல் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.  விசாரணையில் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்த ஜெகன் (43) என்பது தெரிய வந்தது.