இரணியல் ரயில்வே நிலையத்தில் கடத்த முயன்ற அரிசி மீட்பு

0
54

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்றிரவு கண்டன்விளை, இரணியல், திங்கள்நகர்  ஆகிய பகுதியில் தீவிர ரோந்து சென்றனர். இரணியல்  ரயில்வே பகுதியில் செல்லும்போது அங்கு ரயில் மூலம்  கேரளாவுக்கு கொண்டு செல்ல 14 சிறு பிளாஸ்டிக் பைகளில் சுமார் 300 கிலோ அரிசி மூடைகள் தண்டவாளம் பகுதியில் பதுக்கி வைக்கப்ட்டிருந்ததை கண்டு பிடித்தனர். உடனே பறக்கும்படையினர் அவற்றுகளை மீட்டு உடையார்விளை அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.